Listen and Download Kalathil Santhippom Movie MP3 Songs
Kalathil Santhippom is a sports masala movie written and directed by N. Rajasekar. The movie stars Jiiva, Arulnithi Tamilarasu, Manjima Mohan, and Priya Bhavani Shankar. The movie is about the sport of kabaddi and the friendship between two men. The music is composed by Yuvan Shankar Raja. Below in this article, you can get Kalathil Santhippom Movie MP3 Songs.
Unnai paartha naal Song Lyrics
Unnai paartha naal Song lyrics from Kalathil Santhippom Movie. The song was sung by Yuvan Shankar Raja and the lyrics are penned by Pa. Vijay while music is given byYuvan Shankar Raja . The movie starring Jiiva, Arulnithi Tamilarasu, Manjima Mohan, and Priya Bhavani Shankar.
உன்னை பார்த்த நாள்
உன்னை பார்த்த நாள்
எந்தன் வாழ்விலே
நான் என்னை பார்த்த நாள்
Unnai paartha naal
என் ஜன்னலோர ஈர சாரலாய்
நின்று சிந்தி சென்றாய்
என்ன நானும் செய்வதோ
கொஞ்சி பேசி கொல்கிறாய்
நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா
நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா
இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா
உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்
மேலும் மூச்சு வாங்கும்
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்
கால்கள் மேகம் தாண்டுதே
என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்
என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்
Yar antha oviyaththai Song Lyrics
Yar antha oviyaththai Song lyrics from Kalathil Santhippom Movie. The song was sung by Vijay Yesudas and Nivas. The song lyrics are penned by Pa. Vijay while music is given byYuvan Shankar Raja . The movie starring Jiiva, Arulnithi Tamilarasu, Manjima Mohan, and Priya Bhavani Shankar.
யார் அந்த ஓவியத்தை
நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க
கால நேரம் வந்ததோ
கண்ணாடி மாளிகையே
கண் வைத்து பார்த்ததோ
முன்னே அவள் நின்ற போது
கண்கள் கூசி போனதோ
உலக அழகி இல்லை
உலவும் நிலவும் இல்லை
பழக தோழியா தெரியிறா
அதிர சிரிப்பும் இல்லை
அதிக சிவப்பும் இல்லை
அழகின் ஓவியமா அசத்துறா
கவிதை போல வந்து
கனவு போல வந்து
உனக்கு அப்படியே பொருந்துறா
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா
அவதான் உன் மாமன் பொண்ணு
அயில மீன் கண்ணே கண்ணு
உனக்கான ஜோடியின்னு
நான் பார்த்து அசந்த பொண்ணு
என்னன்னு நான் சொல்ல
அழகுன அத்தனை அழகு
அன்றாடம் நீ மெல்ல
ஐ லவ் யூ சொல்லி பழகு
நான் பார்த்த தேவதைக்கு
சிறகில்லை உண்மையில்
அவள் போல பெண்ணை நானும்
பார்த்ததில்லை அண்மையில்
தரை மேலே நின்ற போதும்
மிதக்கின்றாள் மென்மையில்
தங்கத்தை ஊற்றி ஊற்றி
வார்த்து வைத்த பொன்மயில்
லட்சம் பூ பறிச்சு
மிச்சம் தேன் தெளிச்சு
வச்ச அழகு அவ அழகடா
அச்ச பார்வையில
உச்சம் கவிதை ஒன்னு
அச்சில் எட்டி விடும் அடடடா
கச்ச தீவுக்கொரு
மச்சம் வச்சது போல்
பச்சை பசுமை அவ பாரடா
அழகடா அவளடா அசந்து போலாம்டா
அவள் கண்கள் கவிதை பக்கம்
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்
அவள் வந்து முன்னே நின்றால்
நிலவெல்லாம் பின்னே நிற்கும்
மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல
கண்ணாடி சிலையை போல
முன்னாடி சிரிச்சு போறா
ஆத்தாடி உன் மனச
அங்காடி ஆக்க போறா
மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல
Friendship Paatu Song lyrics
Friendship Paatu Song lyrics from Kalathil Santhippom Movie. The song was sung by Jithin Raj and the lyrics are penned by Vivekawhile music is given byYuvan Shankar Raja . The movie actors Jiiva, Arulnithi Tamilarasu, Manjima Mohan, and Priya Bhavani Shankar.
விளையாட போகும்போது
எதிரும் புதிரும் நிப்போமே
வெளியேறி வந்தால்
தோளில் கைகள் சேர்த்து செல்வோமே
யாருக்கு வெற்றினாலும்
ஜோரா ஆடி தீப்போமே
கெத்தா இருப்போமே
ஹே ஹே…..
விவகாரமாக தோணும் சும்மா பாக்க
ஹே ஹே…..
உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க
ஹே ஹே…..
புதிரான பாதை எங்களோட வாழ்க்கை
ஹே ஹே…..
திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்
விளையாட போகும்போது
எதிரும் புதிரும் நிப்போமே
வெளியேறி வந்தால்
தோளில் கைகள் சேர்த்து செல்வோமே
யாருக்கு வெற்றினாலும்
ஜோரா ஆடி தீப்போமே
கெத்தா இருப்போமே
ஹே கண்காணா தூரத்தில்
காலம் நம்மை வைத்தாலும்
துன்பங்கள் வந்தாலே
தோழன் எங்கு கண் தேடும்
சுற்றி எப்போதும்
பல சொந்தம் பந்தம்தான்
என்னவானாலும் ஒரு நண்பன் நண்பன்தான்
காத்தாடியாய் ஒரு காத்தாடியாய்
அட அங்கும் இங்கும் சுற்றி சுற்றி ஆடி வருவோம்
ஏராளமாய் அட ஏராளமாய்
பாசம் வைத்து நெஞ்சில் தாங்கும்
பந்தம் இந்த நண்பன்தான்
எக்ஸாம்பில் இல்லை போட எங்களோட நட்புக்கு
எக்ஸ்குயூஸ்சே கேட்டதில்லை எங்களுக்குள் தப்புக்கு
குட் மார்னிங் ஈவ்னிங் எல்லாம் சொல்ல மாட்டோம் ஒப்புக்கு
இதுதான் பிரண்ட்ஸ்ஷிப்பு
ஹே ஹே…..
விவகாரமாக தோணும் சும்மா பாக்க
ஹே ஹே…..
உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க
ஹே ஹே…..
புதிரான பாதை எங்களோட வாழ்க்கை
ஹே ஹே…..
திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்
ஏன் மறைக்கிறாய்
நீ காதலில் இருக்கிறாய்
நீ மறுக்கிறாய்
ஆனால் என்னை நினைக்கிறாய்
ஏதோ ஒரு வலி மனச
லேசா வந்து வந்து உரச
உன்னை தள்ளி தள்ளி நடக்க
அது மட்டும் என்னால் ஆகல
எப்போ என்ன சொல்லி முடிய
இப்படியே நாளும் விடிய
துண்டு துண்டா உள்ள உடைய
உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல
கை அசைக்கிறாய்
எப்போதும் போல் சிரிக்கிறாய்
ஓ ஓ ஓர் நொடியிலே
எனக்குள் நான் புதைகிறேன்
எந்த பறவை என்னை தாண்டி
போகும் போதும் உந்தன் சாயல்
நீ இல்லாமல் என்ன செய்ய நான்
நீயும் நானும் சொன்ன வார்த்தை
ஒன்று கூட தொலையவில்லை
காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்
என் பழைய நாட்கள் எல்லாம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி
உன் வருகை உள்ளங்கையின்மேல்
சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே
நீ எனக்குள்ளே
என்னென்னம்மோ நடத்தினாய்…..
யார் மறப்பது
தள்ளி சென்றும் நெருங்கினாய்
சொல் இன்னும் என்னை
என்ன செய்ய நினைக்கிறாய்
ஓ ஓ நீ சொல்லாவிட்டால்
உன் காதலை தொலைக்கிறாய்
Yen Maraikirrai Song Lyrics
Yen Maraikirrai song lyrics from Kalathil Santhippom Movie. The song was sung by Aslam Abdul Majeed and the lyrics are penned by Pa. Vijay while music is given by Yuvan Shankar Raja. The movie actors Jiiva, Arulnithi Tamilarasu, Manjima Mohan, and Priya Bhavani Shankar.
ஏன் மறைக்கிறாய்
நீ காதலில் இருக்கிறாய்
நீ மறுக்கிறாய்
ஆனால் என்னை நினைக்கிறாய்
ஏதோ ஒரு வலி மனச
லேசா வந்து வந்து உரச
உன்னை தள்ளி தள்ளி நடக்க
அது மட்டும் என்னால் ஆகல
எப்போ என்ன சொல்லி முடிய
இப்படியே நாளும் விடிய
துண்டு துண்டா உள்ள உடைய
உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல
கை அசைக்கிறாய்
எப்போதும் போல் சிரிக்கிறாய்
ஓ ஓ ஓர் நொடியிலே
எனக்குள் நான் புதைகிறேன்
எந்த பறவை என்னை தாண்டி
போகும் போதும் உந்தன் சாயல்
நீ இல்லாமல் என்ன செய்ய நான்
நீயும் நானும் சொன்ன வார்த்தை
ஒன்று கூட தொலையவில்லை
காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்
என் பழைய நாட்கள் எல்லாம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி
உன் வருகை உள்ளங்கையின்மேல்
சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே
நீ எனக்குள்ளே
என்னென்னம்மோ நடத்தினாய்…..
யார் மறப்பது
தள்ளி சென்றும் நெருங்கினாய்
சொல் இன்னும் என்னை
என்ன செய்ய நினைக்கிறாய்
ஓ ஓ நீ சொல்லாவிட்டால்
உன் காதலை தொலைக்கிறாய்