2021 Tamil Movie Karnan Mp3 Songs – Listen and Download

0

Karnan Mp3 Songs

Listen and Download Karnan Mp3 Songs

Karnan is an action drama movie directed by Mari Selvaraj and produce3d by Kalaipuli S. Thanu under his V Creations banner. The movie stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, and Rajisha Vijayan. The movie music is given by Santhosh Narayanan.  The movie is released on 9 April 2021. Below in this article,  you can get Karnan Mp3 Songs.

Uttradheenga Yeppov Song Lyrics 

Uttradheenga Yeppov or Epo Song Lyrics in Tamil from Karnan Movie. Uttradheenga Epo or Yeppov Song Lyrics penned by Mari Selvaraj. The movie music is given by Santhosh Narayanan. The movie stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, and Rajisha Vijayan.

உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்
உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்

உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்… ஓவ்
உட்றாதிங்க யப்போவ்
யம்மோவ்…

ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உட்றாதிங்க
உட்றாதிங்க
உட்றாதிங்க
உட்றாதிங்க

ததைக்கா புதைக்கா தவளைசோறு
எட்டு எருமை எரும பாலு
தூக்கு மரத்துல துணியக்கட்டி
தொப்பி போட்ட பேயி வந்து
கூப்பிடுது குலவிடுது
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதி கொடியே பயப்படாதே

உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்… ஓவ்
உட்றாதிங்க தாத்தோவ்
உட்றாதிங்க யாசோவ்

நான் காட்டுபேச்சி பாடுறேன்
உங்க காதுக்குள்ள கேக்குதா
அந்த உச்சிமலையில் வாடுறேன்
உங்க உள்ளங்கையில் தெரியுதா

ஹே உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்
உட்றாதிங்க யன்னோவ்
உட்றாதிங்க யக்கோவ்

உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க…

ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உட்றாதிங்க
உட்றாதிங்க
உட்றாதிங்க
உட்றாதிங்க

அண்ணா வரான் இன்னா வரான்
காக்கி சட்டை காஞ்சன் வரான்
காட்டெருது மேல வரான்
கண்டவன அடிக்க வரான்

கனவையெல்லாம் பொசுக்க வரான்
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதி கொடியே பயப்படாதே

வாங்க தெர மறிச்சி ஆடுவோம்
ஏறும் பைதாவெல்லாம் நிறுத்துங்க
ஊர் உலகம் சுத்த போவுறோம்
எங்க ரெக்கை எங்க கேளுங்க

உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்
உட்றாதிங்க தாத்தோவ்
உட்றாதிங்க யாச்சோவ்
உட்றாதிங்க யன்னோவ்
உட்றாதிங்க யக்கோவ்

உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க

ஹே உட்றாதிங்க யப்போவ்
உட்றாதிங்க யம்மோவ்.. ஓவ்வ்
உட்றாதிங்க தாத்தோவ்
உட்றாதிங்க யாசோவ்.. ஓவ்வ்

ஹே.. ஹே…

ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க…
உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க…

ஹோ ஓ ஓ ஓ..

உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க..
உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க..
உட்றாதிங்க உட்றாதிங்க
உட்றாதிங்க…

Kandaa Vara Sollunga Lyrics

Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil from Karnan Movie. The movie music is given by Santhosh Narayanan. The movie stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, and Rajisha Vijayan. Kandaa Vara Sollunga Song Lyrics has penned in Tamil by Mari Selvaraj.

ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…அ

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல……ஆ….ஆ…..ஏ….
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல……ஆ….ஆ…..ஏ….
பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளந்த புள்ள….ஏ….ஏ….ஹே

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை….ஏ….ஏ….ஹே
அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை….ஏ….ஏ….ஹே
ஒத்தகிளி நின்னாக்கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா…ஆ….ஆ….
ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா…ஆ….ஆ….
ஒத்த பூடம்கூட இல்லையப்பா
எங்க குடுபத்துல ஒருத்தனப்பா…ஆ….ஆ….ஆ….

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

கவசத்தையும் கண்டதில்ல…
எந்த குண்டலமும் கூடயில்ல…ஏ…..ஏ…
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை….ஆ…
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை…ஏ…..ஏ…

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஏ…..ஏ…..ஹே…..ஹே…
ஏ…..ஏ…..ஹே…..ஹே…

Thattaan Thattaan Song Lyrics

Thattan Thattan Song Lyrics in Tamil from Karnan Movie. Thattan Thattan Karnan Song Lyrics penned in Tamil by Yugabharathi.The movie music is given by Santhosh Narayanan. The movie stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, and Rajisha Vijayan.

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

மொட்டப்பார பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேக பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி
நான் போற வர பாதையில
நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ

ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்… ஹேய்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

குதிலுல நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

தெருவுல போனாலும்
ஏலேலேலே
புழுதியா வந்தாலும்
ஏலேலேலே
தாவணி ராசாவா மாத்த சொல்லும்

செந்தணலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூறல் அடிக்கும்
ஊர் நெழலா நான் இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்த தாயேன் ராசாத்தி
மொத்தமும் தாரேன் கைமாத்தி

ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

உழவன் வயலுல இறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொன்னா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழக்குடியாம்

பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிக்குடியானோம்
ஜெயிச்சிடு கண்ணு… ஜெயிச்சிடு கண்ணு…

காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு
நம்ம கதைய பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே

ஒடம்பெடுத்து தீகொழுத்து
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்

தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்

தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்

Pandarathi Puranam Song Lyrics

Pandarathi Puranam Song Lyrics in Tamil from Karnan Movie. The movie music is given by Santhosh Narayanan. The movie stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, and Rajisha Vijayan.Pandarathi Puranam Song Lyrics penned in Tamil by Yugabharathi.

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு…

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா…

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு…

யோவ்…ஏமா…அழுகூடாது..அழுவகூடாது…
அடியா…மேளத்த…
ஹேய் தட்டான் தட்டான்…………….

Also, Read: Listen and Download Songs – Ek Mini Katha Movie Mp3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *