Maara Movie Mp3 Songs
Maara movie is a 2021 Indian Tamil-language romantic drama film directed by Dhilip Kumar in his directorial debut and produced by Prateek Chakravorty and Shruti Nallappa of Pramod Films. An adaptation of the 2015 Malayalam film Charlie by Martin Prakkat, the film stars Madhavan, Shraddha Srinath, and Sshivada, reprising the roles played by Dulquer Salmaan, Parvathy Thiruvothu and Aparna Gopinath in the original counterpart.
1. Yaar Azhaippathu Song Lyrics in Tamil
Yaar Azhaippathu Song Lyrics is the first single from the upcoming Tamil Maara movie starring Madhavan. This song is sung by Sid Sriram and the music is composed by Ghibran. Lyrics works are penned by lyricist Thamarai.
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ
மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்
விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
2. Theeraanadhi Theeraanadhi Lyrics in Tamil
Theeraanadhi Theeraanadhi Lyrics in Tamil. The song is from Maara movie. Movie Star Cast is Madhavan, Shraddha Srinath and Others, Singer Benny Dayal. Singer of Theeraanadhi Theeraanadhi is Padmalatha. Lyrics are written by Thamarai. Music is given by Ghibran.
ஓஹ்ஹோஹோ..
எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ..
இப்படியே போகுமோ
எந்தன் உயிரேதீருமோ..
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி
விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது என் வாசல் வழி
எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தகுமோ..
இப்படியே போகுமோ
எந்தன் உயிரேதீருமோ..
ஆகுமோதாகமோ.. போகுமோ
ம்ம்.அருகினில் நான் இருந்தேன்
தொலைவினில் நீ இருந்தாய்
இரு கை நீட்டுகிறேன்
எதிரினில் வாராய்
யாரும் காணாத ரகசிய கோலம்
நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்
தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்
தொலைவில் நீ இருந்தாய்
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி
ஆ..தனிமையின் தூரிகையால்
பனிமலர் நான் வரைந்தேன்
மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்
யாரோ காணும் ஓர் கனவினில் நானும்
தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்
நாணல் போலே நீரில் நான் நனைந்து
நதியாய் மாறுகின்றேன்
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
இறங்கியே வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி
விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி
எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ..
இப்படியே போகுமோ
எந்தன் உயிரேதீருமோ.. (2)
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
தீராநதி தீராநதி
தேடல்களோ தீராதினி
3. Oru Arai Unathu Song Lyrics in Tamil
Oru Arai Unathu Song Lyrics from the Maara is a Tamil drama movie, directed by Dhilip Kumar. The cast of Maara includes Madhavan,Shraddha Srinath.
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
ஆண்: ஒரு கதை உனது ஒரு கதை எனது
விடுகதை முடியுமா
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: வண்ணம் நூறு வாசல் நூறு
இருவரும்: கண் முன்னே காண்கின்றேன்
ஆண்: வானம்பாடி போலே மாறி
இருவர்: எங்கேயும் போகின்றேன்
ஆண்: வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
இருவர்: போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்
பெண்: ஒரு பகல் உனது ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா
ஒரு இமை உனது ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா
பெண்: ஒரு மலர் உனது ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா
ஒரு முகம் உனது ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா
பெண்: ஒரு பதில் உனது ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
ஆண்: ஒரு கதை உனது ஒரு கதை எனது
விடுகதை முடியுமா
4. Oh Azhage Oh Azhage Song Lyrics in Tamil
Oh Azhage Oh Azhage song is from Maara 2020. The Movie Star Cast is Madhavan, Shraddha Srinath, and Others, Singer Benny Dayal. Singer of Oh Azhage Oh Azhage is Benny Dayal. Lyrics are written by Thamarai. Oh Azhage Oh Azhage song music is given by Ghibran.
ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே
ஓ மனமே ஓ மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே
அதில் தஞ்சம் தேடுதே
அடங்காத காற்றே (4)
தூர அலைகள் காலை நனைக்கும்
மாய நதி இது
மேகம் தணிந்து வாசல் தெளிக்கும்
தூய மழை இது
விழாக்கள் தோறும் ஓரமாக
நின்று பார்க்க நேரும்
நிலாக்கள் இன்றி வானம் கூட
மெளனமாக மாறும்
ஒரு வீடு பரிவோடு
வரவேற்க நீளும் போது
அதனோடு உரையாடு
அது போல் ஒரு வரம் ஏது
அடங்காத காற்றே (4)
ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே
காற்றின் குமிழி போல
உடைந்து போகும் மகிழ்வினை
போற்றி வளர்த்து போற்றி வளர்த்து
காக்கும் ஒருவனை
துழாவி தேடி கண்ணின் முன்பு
கொண்டு காட்டும் காலம்
கனாவில் கூட நேர்ந்ததில்லை
நேர்ந்ததிந்த மாயம்
அவன் யாரோ தொடுவானோ
தொலை தூர கோடு தானோ
வழி தேரோ வரலாறோ
புரியா குறுநகை தானோ
ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
ஓ மனமே ஓ மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே
அதில் தஞ்சம் தேடுதே
அடங்காத காற்றே (2)
5. Kaathirundhen Kaathirundhen Song Lyrics in Tamil
Kaathirundhen Kaathirundhen Lyrics in Tamil. Kaathirundhen Kaathirundhen song is from Maara 2020. The Movie Star Cast is Madhavan, Shraddha Srinath and Others, Singer Benny Dayal. Singer of Kaathirundhen Kaathirundhen is Ananthu and Srisha Vijayasekar. Lyrics are written by Thamarai. Music is given by Ghibran.
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை
நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை
முகவரிகள் இல்லா
ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே
அறிமுகங்கள் இல்லா
பல கதவுகளிலும்
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே
பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தை என எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே
காலம் உறைந்தே..போகும்
காற்று அழுதே தீரும்
இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை
நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை
ஆஅ..ஆ..ஆ.ஆ.
6. Unnai Thaane Song Lyrics in Tamil
Unnai Thaane Song Lyrics from the Maara is a Tamil drama movie, and it is directed by Dhilip Kumar. The cast of Maara includes Madhavan, Shraddha Srinath’s main roles in this movie.
பெண் : ஓஹோ ஹோ ஓ…
உன்னைத்தானே…
பெண் : உன்னைத்தானே…
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்…
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்…
பெண் : மாய நதியே…
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்…
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்…
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு…
குழு (ஆண்கள்) : ஓஹோ… ஓஓஹோ ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
—BGM—
பெண் : உன்னைத்தானே… சந்திப்பேனே…
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே…
—BGM—
Also Read: Maaran Movie Latest News Updates, Cast & Crew, and Releasing Date Details