Maaran Movie Mp3 Songs – Watch & Download

0

Maaran Movie Mp3 Songs

Maaran Movie Mp3 Songs

Maaran aka Maran is a Tamil thriller movie, directed by Karthick Naren. The cast of Maaran aka Maran includes Dhanush,Malavika Mohanan. Here you can get the full details about the Maaran Movie Mp3 Songs.

1. Polladha Ulagam Song Lyrics in Tamil

Polladha Ulagam 1st single from the upcoming Maaran movie. Sung by Dhanush and Arivu, Starring Dhanush and others. The movie is produced by Sathya Jyothi, Directed by Karthick Naren, and Music composed by GV Prakash Kumar.

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு

அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ

உன்ன கிங் என்பான் ப்றோ
வுட்டா காட் என்பான் ப்றோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு னோ

உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு

என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா
லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மாள் ஆ நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்றோ
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்றோ

உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு

அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ

உன்ன கிங் என்பான் ப்றோ
வுட்டா காட் என்பான் ப்றோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு னோ.

2. Annana Thaalaattum Song Lyrics in Tamil

Annana Thaalaattum Song Lyrics penned by Vivek, music composed by GV Prakash Kumar, and sung by Anurag Kulkarni from Tamil Maaran movie.

அண்ணன தாலாட்டும்
அன்னை மடி நீ
சித்திர பூவே
என் செல்லமடி நீ

கண்ணெல்லம் நீயாகும்
கொல்லை மதி நீ
காலமே போனாலும்
பிள்ளை மொழி நீ

ஹே, சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா, ஹோ
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான், ஹோ

தொணைன்னு நான் சொல்லி
கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தன்னடி என் ராசாத்தி

உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா

கொறயாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா

திட்டி திட்டி நான் கொஞ்சம்
நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட
துடிச்சிருப்பேன்

என்ன விட பல நேரம்
உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட
ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி

அண்ணன தாலாட்டும்
அன்னை மடி நீ
சித்திர பூவே என்
செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும்
அன்னை மடி நீ

3. Chittu Kuruvi Song Lyrics in Tamil

Chittu Kuruvi Song Lyrics penned & sung by Dhanush, music composed by GV Prakash Kumar from Tamil Maaran movie.

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
கண்கள் மெதுவாய்… மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு

சிட்டு குருவி
சிட்டு குருவி
சிட்டு குருவி

தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே

விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்
மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்

சிட்டு குருவி
சிட்டு குருவி
சிட்டு குருவி

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
கண்கள் மெதுவாய்… மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு

சிட்டு குருவி
சிட்டு குருவி
சிட்டு குருவி

Also Read: Bheemla Nayak Movie Mp3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *