Tamil Songs-Listen And Download Uriyadi 2 Movie MP3 Songs

0

Uriyadi 2 is a Tamil action thriller Movie, produced by the Suriya, and directed by Vijay Kumar. Also, Starring by Vijay Kumar, Sudhakar, and Vismaya is in the lead role of the movie. Check, below the list of Uriyadi 2 MP3 songs download.

Also, check MP3 Songs

Listen and Download Uriyadi 2 Songs

1.Urimai

Urimai Song Lyrics from Uriyadi 2 Movie. This song lyric was written by Vijay Kumar and Nagaraji. Urimai Song music was composed by Govind Vasantha and Song was sung by Govind Vasantha.

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம் போராட வா

சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம் போராட வா

உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம் போராட வா

உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம் போராட வா

தோழா தீயாய் வா
தோழா தீர்வாய் வாடா

வயலும் காய்ந்து போனதடா
வயிறும் காய்ந்து போனதடா
கனவும் காற்றில் கலந்ததடா
கருவும் உதிரம் ஆனதடா

நீதி என்றும் வெல்லுமடா
சூது விலகி செல்லுமடா
நாதி அற்று நின்றோமடா
நியாயம் கேட்டு வந்தோமடா

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

அகழ்வாரை தாங்கும் நிலமாய் இருந்தோம்
சிதைந்தோம் யாவும் இழந்தோம்

இகழ்வோரை எதிர்த்து
இதிகாசம் படைப்போம் நாளை நமதே

உரிமை மிரட்டி பறித்தார்கள்
பொறுமை கண்டு பழித்தார்கள்
கடமை மறந்து நடந்தார்கள்
வாக்கை வாங்கி ஏய்த்தர்கள்

வலைகள் இங்கு விரித்தார்கள்
பிழைப்பை காட்டி வளைத்தார்கள்
வழிகள் இல்லை மரித்தார்கள்
விழிகள் திறந்து பார் இங்கே

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்

விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்

Listen & Download Urimai MP3 Song.

2. Vaa Vaa Penne

Vaa Vaa Penne Song Lyrics from Uriyadi 2 Movie. This song lyric was written by Vijay Kumar and Nagaraji. Vaa Vaa Penne Song music was composed by Govind Vasantha and Song was sung by Sid Sriram and Priyanka.

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்

என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்

என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்

நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்

நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ

அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ

நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்

புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்

காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்

ஆண் மற்றும்
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்

ஆண் மற்றும்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்

வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும்
ஓர் உயிர் தானே

வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின்
புது வரம்தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *